Saturday, November 5, 2011

உடல் எடை குறைக்க


வணக்கம்!
உலக சுகாதார மையம் (WHO) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 30 ஆண்டுகளில் உடல் எடை அதிகம் உள்ளோரின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்து தற்போது உலகத்தில் 1/10 நபர் உடல் எடை அதிகம் உள்ளவராக இருக்கிறார்.


இதற்க்கு முக்கிய காரணமாக WHO தெரிவிப்பது அமெரிக்க உணவு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதே என்கிறது.பொதுவாக ஆசியா மக்கள் obesity – யால் அதிகம் பாதிக்க படாதவர்களாக இருந்தார்கள்,ஆனால் இப்பொழுது இப்பொழுது கணிசமாக பாதிக்க பட்டிருக்கிறார்கள்,காரணம் கலாச்சார மாற்றம் என்கிறது WHO.


சரி!அது வேறு பிரச்சனை,தங்களின் கேள்விக்கு வருவோம்,


ஏன் உடல் பருமன் ஆகிறது?
1.குடும்ப வாயிலாக வரக்கூடியதால் (Example:தாத்தா-அப்பா-மகள்) – Genetic.


2.உடல் தனது தேவைக்கு அதிகமாக உணவு கிடைக்கும் பட்சத்தில்,உணவை கொழுப்பு சத்தாக மாற்றி சேமித்து வைத்து கொள்கிறது(பிற்கால உபயோகத்திற்காக),ஆனால் அது அந்த கொழுப்பு சத்தை உபயோகிப்பதே இல்லை,ஏனென்றால் நாம் தினமும் தேவைக்கு அதிகமாக உண்பதால் உடலிற்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் மறுபடியும் நிறைய கொழுப்பு சத்தாக சேமித்து வைக்கிறது – அதுவே உடல் பருமனடைய காரணம்.


3.அளவிற்கு அதிகமாக snacks மற்றும் கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவை உண்பதால்.


4.உடலிற்கு தகுந்த வேலை தராமல் இருப்பதால்.


5.மன உளைச்சல் அதிகமானால் பெரும்பாலான மக்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் , ஆகவே இந்த நவீன உலகத்தில் மன உளைச்சல் உடல் பருமனாவதர்க்கு பெருமளவு காரணமாக உள்ளது.


6.நீண்ட காலமாக குறிப்பிட மருந்துகளை எடுத்து வருவதால். For example – Prednisolone,Anti-depressants.


7.குறைவான நேரம் உறங்குவது.


8.சில வகையான நோய்களும் உடல் பருமன் உண்டாக்கும். For example – Hypothyroidism,Cushing’s syndrome போன்றவை உடலுக்கு தேவையான hormone-களை குறைவாகவோ,அதிகமாகவோ சுரப்பதால் உடல் பருமனடைகிறது.


அடிப்படையில் உடல் பருமனை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது?


1.ஆரோக்யமான முறையில் உடலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் சாப்பிடாமல் இருப்பதாலோ,திடீரென அதிகமான உடற்பயிற்சி செய்வதாலோ வராது.


example – நீங்கள் திடீரென 5km ஒடுவதாலோ , 2 வேலை உணவை விட்டு விடுவதாலோ உடல் பருமன் குறையாது. பருமன் குறையும்,உண்மை!ஆனால் கூடவே ஆரோக்யமும் குறையும்.மன உளைச்சல் அதிகம் ஆகும்.


ஆகவே ஆரோக்யமான முறையில் உடலை குறைக்க முயற்சி செய்வோம்,எப்படி?


உணவு:
————


1.கொழுப்பு சத்து 2 வகைப்படும் –


a)Poly-unsaturated and Mono-unsaturted – Good Fat.
b)Saturated and Trans fat – Bad fat.


இதில் good fat வகைகள் அதிகமாக காய்கறி மற்றும் பழங்களில் காணப்படும்,அவை அதிகமான Cholesterol-ஐ குறைக்கும். அதற்க்கு மாறாக Bad fat வகைகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளில் அதிகம் உள்ளது,இவை உடலிற்கு தீங்கு செய்ய கூடியவை (அதிக அளவில் எடுக்கும் போது)


Bad fat மிக்க பொருள்களை குறைக்கவும் – Milk,Cheese,Beef,Pork,Liver,Ice cream,Hot dogs,Margarine,Paneer,Palm oil,Coconut,Chicken,Egg Yolk,Pizza,Burger,Fried rice,Chocolates,Chips,Cream..etc.


அதற்க்கு பதில் Good fat உணவில் சேர்த்து கொள்ளலாம்.


Good fat – Olive oil,Soybean,Flax seed,Mayonnaise,Vegetable oil போன்றவை.


2. Colorful plate – காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் குறைந்தது 5 வண்ணங்கலாவது நமது தட்டை அலங்கரிக்க வேண்டும்.
உதாரணம் : 1 காரட் + ஒரு கீரை வகை + 1 apple + 100 gm கடலை வகை + Orange juice 1 cup.


3.நீங்கள் உடல் எடையை உண்மையாகவே குறைக்க விரும்பினால் நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும். நீங்கள் தினமும் 300-500 calories குறைப்பதால் ஒரு வாரத்தில் 1-2 kg எடை குறையும்,அதுவே ஆரோக்யமான முறை.


ஒரு நாளைக்கு 1500 calories நீங்கள் எடுக்க வேண்டும்.அதை 3 வேலையில் உண்ணாமல் 5 or 6 சிறு சிறு பாகங்களாக உண்ண வேண்டும். 1500 calories-கும் குறைவாக உண்ண கூடாது.அது பல பிரச்சனைகளை உண்டாக்கும்.


4.கொழுப்பு சத்தை விட்டு Whole grains(oats,whole grain bread,pop corn,brown rice etc..),Fruits,vegetables-ஐ உணவில் சேர்க்கவும்.


5.Coca-cola,pepsi,milk shakes போன்றவற்றைத் தவிர்த்து நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.


6.Tea,coffee போன்றவற்றில் சர்கரையின் அளவை வெகுவாக குறைக்கவும் அல்லது சர்க்கரையைத் தவிர்க்கவும்.


7.Snacks-ஐ தவிர்க்கவும் (Biscuits,cookies,cakes,chips,fast foods,chips,or any kind).இவற்றை எல்லாம் ஒரே அடியாக தவிர்க்க அவசியம் இல்லை,எப்பொழுதாவது Party போன்ற சமயங்களில் சிறு அளவு உண்ணலாம்.ஆனால் தினமும் Party இருந்தால் நான் பொறுப்பல்ல.


8. Breakfast-ஐ தவிர்க்க கூடாது,அது பசியை ஏற்படுத்தி மற்ற வேளைகளில் நிறைய உணவு உட்கொள்ள வழிவகுக்கும்.


உடற்பயிற்சி:
——————-
ஏற்கனவே சேர்ந்த கொழுப்புகளை எப்படி அகற்றுவது? அதற்க்கு உடற் பயிற்சி இன்றியமையாதது, நாம் உடலிற்கு வேலை கொடுக்கும் போது
உடல் தான் சேர்த்து வைத்திருக்கின்ற கொழுப்புகளை எல்லாம் எரி சத்திகலாக பயன்படுத்தி கரைக்கும்.அதற்காக ஒரே நாளில் நாள் முழுவதும் உடற் பயிற்சி செய்ய கூடாது.அது உடலில் மற்ற மாற்றங்களை உருவாக்கும்.


என்ன செய்யலாம்?
1. Yoga மிக உதவியாக இருக்கும். காலை மாலை 30 minutes செய்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
2. 20 minutes walking நல்லது.
3. Friends-உடன் Badminton விளையாடலாம்.
4. உங்களுக்கு வீட்டை அழகாக வைத்திருக்க பிடிக்குமானால் வீட்டை அழகாக வைத்திருப்பது,சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.
5. Fitness centre-இல் முறையான நிபுணரின் மேற்பார்வையில் உடற்பயிற்சி செய்யலாம்.
6.நீங்களாக வழிய சென்று வேலைகளை செய்யலாம் (கடைக்கு போவது,துணி துவைப்பது etc..)


மனஉளைச்சல்:
————————
1.Meditation மிக நல்லது.தினமும் காலை மாலை 15 minutes உங்களின் எதிர் காலத்தையோ,இந்த நாள் அமைதியாக இருக்கும் என்றோ,இஷ்ட தெய்வத்தையோ நினைத்து அமைதியாக இருக்கலாம்.
2.Tv பார்ப்பதை குறைத்து உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்யலாம்.(Drawing,Painting,gardening etc..)
3. கண்டிப்பாக 7-8 மணி நேரம் உறங்க வேண்டும். Late night-இல் உறங்க போவதை தவிர்க்கும்.
4.மன உளைச்சலான சமயங்களில் அமைதி படுத்திக்கொள்ள மென்மையான இசை,நகைச்சுவை,புத்தகங்கள் உதவும்.
5.உங்களுக்கு திறமைகளை வளர்க்கலாம் – பாட்டு பாடுவது,நடனம்,விளையாட்டு போன்றவை.
6.வாரம் ஒரு முறை தங்களின் உடல் எடையை அளந்து பார்த்து ‘என்னால் முடியும்’ என்று சொல்லி கொள்ளுங்கள். அதுவே தங்களின் முயற்சிக்கு அடிப்படையை அமைக்கும். அதே போல் கண்ணாடி முன் நின்று சொல்லி கொள்ளுங்கள்.


மேற்கூறிய அனைத்தும் அடிப்படையானவை , அதே போல் நீங்கள் குறிப்பிட்ட மருந்தை நீண்ட காலமாக எடுத்து வரும் பட்சத்தில் அது பற்றி தங்களின் Family doctor அல்லது General doctor போன்றவரிடம் அவர்களின் அபிப்ராயம் பெறலாம்.


மேற்கூறிய அணைத்து செய்திகளும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி!

உடல் எடை குறைக்க 




 3 மாதத்தில் 20 கிலோ கண்டிப்பா குறைய முடியாது, அப்படி குறைந்தால் நமக்கு ஏதாவது வியாதி இருக்குனு அர்த்தம். எதுவுமே படிப்படியாக இருப்பதுதான் நல்லது. வெயிட் போடுவதாக இருந்தாலும், வெயிட் குறைவதாக இருந்தாலும் உடனே நிகழ்தல் நம் உடம்பிற்கு நல்லதல்ல.




காலையில் எழுந்ததும் ப்ரெஷ் பண்ணி விட்டு சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விட்டு வெதுவெதுப்பான தண்ணீர் 2 க்ளாஸ் அருந்துங்கள். 20 நிமிஷம் கண்டிப்பா வாக்கிங் போங்க. காலை உணவாக கோதுமை ப்ரெட், அல்லது ஓட்ஸ் கஞ்சி அல்லது ராகி கஞ்சி அருந்துங்க. 11 மணிக்கு ஸ்கிம்டு மோர் ஒரு டம்ளர் குடிங்க இடையிடையே பசிக்கும் போது கேரட், வெள்ளரி சாலட் சாப்பிடுங்க. அல்லது சூப் வச்சிக் குடிங்க.




மதியம் 2/3 சப்பாத்தி சாப்பிடுங்க. நிறைய வெஜிடபுள்ஸ்வுடன், அல்லது கொஞ்சமாக சாதம் வித் வெஜிடபுள்ஸ் சாப்பிடுங்க. வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. சாப்பிட ஆரம்பிக்கும் போதே முதலில் வெஜ் பொரியல் நிறைய சாப்பிடுங்க பிறகு ரைஸ் வச்சு சாப்பிடுங்க. இன்னும் ரைஸ் வேணும் என்று வாய் கேக்கும் போது தண்ணீர் குடிங்க. தாளிக்கும் வகைகளில் மொத்தமே 3 ஸ்பூன் எண்னெய்க்கு மேலே போகாம பார்த்துக்கோங்க. பொரியல் எல்லாமே தேங்காய் சேர்க்காதீங்க.




ஈவ்னிங் லோபேட் மில்க்கில் காபி, டீ ஏதாவது சாப்பிடுங்க அப்புறம் ஏதாவது பயிர் அவிச்சி சாப்பிடுங்க. மெயினா பச்சை பயிரு. இதை முளைகட்ட வச்சி சாப்பிடுவதுதான் இன்னும் பெட்டர். இதிலே நிறைய சப்ஜி பண்ணலாம், நம்ம டேஸ்ட்க்கு ஏத்தமாதிரி ஆனால் ஒரு ஸ்பூன் ஆயில் நோ தேங்காய்.




நைட் டின்னர் 7/8 மணிக்கே சாப்பிடனும். அதன் பிறகு 2 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிட கூடாது. அதன் பிறகு படிச்சா ஒரு ப்ரூட் சாப்பிடுங்க. படுக்கும் போது ஸ்கிம்டு மில்க் ஒரு டம்ளர் குடிங்க. தனியா குடிக்க பிடிக்கலைனா போர்ன்விட்டா இப்படி ஏதாவது கலக்கி குடிங்க.




6 மணிக்கு மேல ஆயில ப்ரை பண்ணின ஐயிட்டம் எதுவும் சாப்பிடாதீங்க. வடை, பஜ்ஜி, சமோசா இந்த மாதிரி சொல்றேன். வடையில் உள்ள பருப்பு 2 மணிநேரத்தில் டைஜஸ்ட் ஆகிவிடும் ஆனால் ஆயில் டைஜஸ்டாக 8 மணிநேரம் ஆகுமாம். நெட்டில்தான் படித்தேன். பொதுவாக நைட் அதிகமாக எதுவும் சாப்பிட வேண்டாம்.




கண்டிப்பாக 3 வேலையும் தவறாமல் சாப்பிடுங்க. ஒரே மாதிரி சப்பாத்தி சாப்பிட பிடிக்காது. வித்தியாசமா செஞ்சி சாப்பிடுங்க, மூலி ரொட்டி, மேத்தி ரொட்டி, தால் ரொட்டி னு அப்பதான் ரசிக்கும். ராகி மாவில் இட்லி, தோசை பண்ணி சாப்பிடுங்க. வாரத்தில் ஒருநாள் வெறும் கஞ்சி வகைகள் மட்டுமே சாப்பிடுங்க. அதாவது, ஓட்ஸ், ராகி, இந்த மாதிரி. வயிறை பட்டினி போடாதீங்க. விரும்பினால் நாஜ்வெஜ் கொஞ்சமாக எடுத்துக்கோங்க அதுவும் மதிய உணவில். முட்டையில் வெள்ளைக்கருவை ஆயில் இல்லாமல் நான்ஸ்டிக் பேனில் ப்ரை பண்ணி சாப்பிடலாம். இரவு உணவில் அதிக கலோரி கொண்ட எந்த உணவும் எடுக்காதீங்க. ரைஸ், நூடுல்ஸ், உப்புமா, சேமியா இதெல்லாம் அதிகம் எடுக்காதீங்க. முளைக்கட்டிய பயிரை பொரியலில் கடைசியாக் கொஞ்சம் சேருங்க.




வாரத்தில் ஒருநாள் மட்டும் விரும்பிய உணவை மதிய வேளையில் சாப்பிடுங்க அதுவும் அளவோடு. ஒரே இடத்தில் 1/2 நேரத்திற்கு மேல் உக்காராதீங்க. எழுந்திரிச்சி 2 நிமிஷம் நடந்துட்டு வாங்க. அந்த சமயத்தில் தண்ணீர் குடிங்க. ஜஸ்ட் கை, காலை அசைத்து விடுங்க. 3 மாதத்தில் 10 லிருந்து 12 கிலோ கண்டிப்பா குறைஞ்சிடுவீங்க.




வாய கட்டுவது சாதரணமான விஷயம் இல்லை. ஒரு 10 நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் எல்லாமே நமக்கு பழகி விடும். நான் பாலோ பண்ணும் முறைய உங்களுக்கு சொல்லியிருக்கேன். ட்ரை பண்ணுங்க . ஆல் பெஸ்ட

Tuesday, September 7, 2010






சூரிய நமஸ்காரம்

சூரியனை முழுமுதல் கடவுளாக நம் முன்னோர்கள் போற்றி வணங்கியுள்ளனர். சங்ககால இலக்கியங்களில் சூரியனே முதற் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி விஞ்ஞான உலகின் ஜீவ நாடியாக உள்ளது. சூரிய உதயத்தைக் கணக்கிட்டுத்தான் ஜாதகப் பலன்களையும் கணிக்கின்றனர். இராகு காலம், எமகண்டம், நல்லநேரம் குறிக்கின்றனர். இதிலிருந்து சூரியனை கடவுளாக வணங்கி வந்தது நமக்கு தெரியவருகிறது. இன்று சூரிய சக்தியை மின்சாரம் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த சூரிய சக்தி மனித உடலுக்கு மிகவும் தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சூரியனின் அனுக்கிரகம் அவசியத் தேவையாகும்.பொதுவாக சூரிய ஒளியின் சக்தியானது நமது உடலில் உள்ள சரும நோய்கள், மேக நோய்கள், சித்தபிரமை மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் சக்தி கொண்டது. ஆகவே சூரிய பகவானை முறையாக வணங்கி அதன் ஆசியைப் பெறுவோம். பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு, தண்டுவடப் பிரச்சனை, குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டோர் தகுதி வாய்ந்த யோகாசன நிபுணரை கலந்து ஆலோசித்த பின்பே சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்ய வேண்டும். சூரிய நமஸ்கார வரிசை
1. நமஸ்காரம் ஆசனம்
2. ஊர்த்துவ நமஸ்கார ஆசனம்
3. பாத ஹஸ்த ஆசனம்
4. ஏகபாத பிரசரனா ஆசனம்(வலது கால்)
5. துவி பாத பிரசரனா ஆசனம்
6. சாஷ்டாங்க ஆசனம்
7. புஜங்காசனம்
8. பூதாராசனம் என ஏறுவரிசையில் எட்டு நிலைகளும்
9. ஏக பாத பிரசரனா ஆசனம் (இடதுகால்)
10. பாத ஹஸ்த ஆசனம்
11. ஊர்த்துவ நமஸ்கார ஆசனம்
12. நமஸ்கார ஆசனம் - என இறங்கு வரிசையில் நான்கு நிலைகளும் உள்ளடங்கியதாகும்.‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை நீள ஒலித்து தியானம் செய்து, சூரிய பகவானின் நாமத்தை ஓதி முறையான சுவாசத்தோடு சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.





நமஸ்கார ஆசனம்:

சூரிய நமஸ்காரத்தின் நமஸ்கார ஆசனமே ஆரம்ப நிலையும் முடிவு நிலையும் ஆகும்.

1.இரண்டு கால்களின் பெருவிரல்களை ஒன்று சேர்த்து கிழக்கு திசை நோக்கியபடி நிமிர்ந்து நிற்கவேண்டும். உள்ளங்கைகளை ஒன்றோடொன்று சேர்த்து, நமஸ்கார முத்திரையில் மார்போடு ஒட்டி, கைகளின் கட்டை விரல்கள் நெஞ்சுக் குழியினை தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடி மனதில் சூரிய உதயத்தினை கற்பனை செய்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தோடு சூரிய பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். கவனத்தில் கொள்ளவேண்டியவை கால்பெருவிரல்கள், குதிகால்கள், கால் மூட்டுகள் தொடைகள் நேராக சேர்ந்து இருக்க வேண்ட
டும் கண்களை மூடி சுவாசத்தில் கவனம் செலுத்தி இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும்.

பயன்கள்:

இடுப்பு பலமடையும்· மார்பும், வயிறும் சரியாக அமைய உதவும்.· நேரான நிமிர்ந்த நன்னடைக்கு வழிவகுக்கும்.· கண்களும், கண் நரம்புகளும் புத்துணர்வு பெறும். சூரிய நமஸ்காரம் தரக்கூடிய நன்மைகளை அதைச் செய்யும் ஒருவர் பெறக்கூடிய மன, உடல் ஆத்ம நலனிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
சூரிய நமஸ்காரத்தின் 12(14) நிலைகள் வருமாறு :
2 கைகளைத் தலைக்கு மேலே துாக்கி உடலைபின்பக்கம் சாய்க்கவும், முச்சை முழுவதும் உள்ளிழுக்கவும்.


3. உடலை முன் வலைக்கவும், முழங்காலை நெற்றியால் தொடவும், கால்களின் மனிக்கட்டை பிடிக்கவும், முழுவதும் வெளிமூச்சு விடவும்.



4. வலது காலை பின்னே நீட்டி, இடது முழங்காலை முன்னே கொண்டு செல்லவும். மேலே பார்கவும் உள்முச்சு இழுகவும், தொடையைக் குதிகாலால் அழுத்தவும்.



5. இடது காலையும் பின்னே நீட்டி, கால்விரல்கள் மீதும் உள்ளங்கைகள் மீதும உடலைத் தாங்கு. உடலை நேராக வைக்கவும், தலை கால்விரல் நேர்கோடு தரைக்கு 30 டிகிரியில் இருக்கட்டும். முழுவதும் வெளிமூச்சு விடவும்.





6. கால் முட்டியை மடக்கி தரையில் வைத்து குதிகாலின் மீது அமரவும்.



7. கைகளையும் கால்விரல்களையும் நகர்த்தாமல், மார்பை மட்டும் கைகலுக்கு நடுவே நகர்த்தி தரையில் வைக்கவும், இடுப்பு மேலே துாக்கி இருக்கும். மூச்சை வெளியேற்றிய நிலையில் இருக்கவும்.



8. மூச்சை உள்ளிழுத்து, தலையைத் துாக்கி, உடலையும் உயர்த்தி, முதுகெலும்பு கீழே வளைந்திருக்கட்டும், கைகள் கால்கள் இடம் மாறாதிருக்கவேண்டும்.



9. மூச்சை வெளிவிட்டு,இடுப்பைத் துாக்கி தலையைக் கீழே அழுத்து, உடலை வளைத்து, குதிகால்கள் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கட்டும். உள்ளங்கைகள் தரையில் பதிந்து இருக்கட்டும்.

10. உள்மூச்சு இழு, வலது காலை இரு கைகட்கிடையில் அவற்றுடன் ஒரு நேர்கோட்டில் வை. முதுகெலும்பைக் கீழே வளை, நிலை 3 போல் செய்யவும்.



11. வெளி மூச்சு விடு. இடது காலை முன் கொண்டு வந்து வலது கால் பக்கத்தில் வைக்கவும். நிலை 3 போல் முழங்காலில் நெற்றியைப் பதித்து வைக்கவும்.

௧௩.கைகளைத் தலைக்கு மேலே துாக்கி உடலைபின்பக்கம் சாய்க்கவும், மூச்சு முழுவதும் உள்ளிழுக்கவும் நிலை 2 போல்.


14. வெளி மூச்சு விடவும் , நேரே நிற்கவும், நிலை 1 போல். பிறகு கைகளை உடலுக்கு அருகில் வைக்கவும், உடலைத் தளர விடவும்.
இது போன்று ஒன்பது முறை செய்வது ஒரு சுற்று ஆகும்.

Tuesday, August 31, 2010

யோகா என் பார்வையில்

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.

ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.


யாருக்கு பயன் ?

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், வீட்டு வாடகை, பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, சாலை சரியில்லாதது, காப்புறுதி, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைகபடுகிரோம். இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது. இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.





மேலேயுள்ள படத்தில் பாருங்கள். இது போன்ற கடினமான ஆசனப்பயிற்சி தான் யோகா என்று இல்லை. மென்மையாக, உடலுக்கு எந்த விதமான துன்பத்தையும் தராத சிறந்த பயிற்சிகள் உண்டு.
உலக அளவில்
மாரி வரும் சூழலை உங்கலுக்கு சாதகமாகப் பயன்படுத்த தயாரா வாசகர்களே!

எனது முதல் கட்டுரை "சூரிய நமஸ்காரம்" வரும் வாரம் தொட‌ரும்.......